Sunday 26 May 2013

நெப்பெந்தஸ் பூ







குடுவை போன்ற இமைகளால்

பார்வை என்னும் மதுவைச் சுரந்து

உள்ளே இழுத்து என்னைக் கொன்ற

நெப்பெந்தஸ் பூ;


உன் கண்கள்....


முதல் ஸ்பரிசம்.





முதல் மழையில் நனையும் போதும் சரி,

தென்றல் என்னை வருடும் போதும் சரி,

என் நினைவுக்கு வருவதென்னவோ;

உன் முதல் முத்தமும்,

உன் முதல் தீண்டலும் தான்.