Wednesday 7 December, 2011

கட்டித்தழுவும் கவிதை


                       
சலவைக்கு போடப் போன அம்மாவிடம் இருந்து

அவசர அவசரமாய் வாங்கினேன்; என் துப்பட்டாவை!

ஏனென்று தெரியாமல் என்னைப் பார்த்த அவளிடம்

சொல்ல இயலவில்லை .....ம் கடைசி சந்திப்பில்

அது நீ போர்த்தியது என்று!!!!!!!!!!

பாவம் அவளுக்கு எப்படி தெரியும்...?

உன் ஞாபகம் வரும் போதெல்லாம்; உனக்கு

பதிலாய் அதைத்தான் போர்த்திக்கொள்கிறேன் என்று;

ரவில் உன் நினைவுக்கு நான் இரையாகும் போதெல்லாம்;

என்கைகள் கட்டித்தழுவும் கவிதை அது என்று;

றையென பூஜைசெய்யும் அத்துப்பட்டாவை;

இரையாக்க விருப்பமில்லை சோப்பு நுரைக்கு...

என்னைத் தவிர வேறொருவரும் உணர வாய்ப்பில்லை...

சலவை செய்யாத அத்துப்பட்டாவில்

சலனம் செய்யும்;உன் வாசனையை!!!!!


9 comments:

Agarathan said...

உன் ஞாபகம் வரும் போதெல்லாம்; உனக்கு

பதிலாய் அதைத்தான் போர்த்திக்கொள்கிறேன் என்று;

அருமை தோழி .... வாழ்த்துக்கள்

- பிரகாஷ்

சக்தி ரேவதி said...

நன்றி தோழர் பிரகாஷ்..........

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//இறையென பூஜைசெய்யும் அத்துப்பட்டாவை;

இரையாக்க விருப்பமில்லை சோப்பு நுரைக்கு...//

...ஹ்ம்ம். ரொம்ப சூப்பர். :)

//சலவை செய்யாத அத்துப்பட்டாவில்
சலனம் செய்யும் உன் வாசனையை //

...ரொம்ப ரசித்த வரிகள். தொடருங்கள். :))

Anonymous said...

கொடுத்துவைத்தவர் தான் துப்பட்டா போர்த்தியவர். நல்ல கவிதை

ராஜி said...

சலவை செய்யாத அத்துப்பட்டாவில
சலனம் செய்யும் உன் வாசனையை
>>>
காதலில் விழுந்துட்டாலே இப்படித்தான் போலும்

சக்தி ரேவதி said...

இருக்கலாம்........... எனக்கும் அனுபவம் இல்லை....

Napoo Sounthar said...

//இருக்கலாம்........... எனக்கும் அனுபவம் இல்லை....// அட கடவுளே! அப்படியா???!!!!

சக்தி ரேவதி said...

நன்றி

இராஜராஜேஸ்வரி said...

என்னைத் தவிர வேறொருவரும் உணர வாய்ப்பில்லை...

சலவை செய்யாத அத்துப்பட்டாவில்

சலனம் செய்யும் உன் வாசனையை

சலன்ம் ஏதும் கொள்ளாமல் இருக்க வாழ்த்துக்கள்..

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி. கருத்துரையிட்டு கரையேற்றுங்கள்..